விழுப்புரம்: காவேரிபாக்கத்தில் ஏசி இயந்திரம் வெடித்து அறையில் தீ விபத்து: 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் காவேரிபாக்கத்தில் வீட்டில் இருந்த ஏசி இயந்திரம் வெடித்து அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியாகினர்.
விழுப்புரம்,
திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர்கள் ராஜூ. அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்து வந்துள்ளார். அவருடன் மனைவி கலா, மகன் கவுதம் காவேரிபட்டினத்தில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜு( வயது 60), மனைவி கலா (50) , மகன் கவுதம் (25), ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர். ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story