13 போலீஸ் நிலையங்களில் புகார்: முன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் மனு
அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story