அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம் புகார்


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம் புகார்
x
தினத்தந்தி 16 May 2019 9:43 AM GMT (Updated: 16 May 2019 9:43 AM GMT)

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகி பிரியதர்ஷினி புகார் மனு அளித்தார்.

சென்னை,

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.

அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்நிலையில்,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகி பிரியதர்ஷினி புகார் மனு அளித்தார். 

அதில்,  மக்களை குற்றம் செய்ய தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story