ஜுன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம்
ஜூன் 8-ம் தேதி நடைபெறவிருந்த பி.எட்.தேர்வு ஜூன் 13-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா அறிவித்துள்ளார்.
சென்னை,
2017-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான், ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த மாதம் 8,9- ம் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பி.எட் கடைசி ஆண்டு தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், இரண்டு தகுதி தேர்வுகளையும் எழுத தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், ஜூன் 8-ம் தேதி ஆசிரியர் கல்வியியல் தேர்வும் நடைபெற உள்ளது.
இந்த இரண்டு தேர்வுகளும் மிக முக்கியம் என்பதால் எதை எழுதுவது என மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர். அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதன் அடிப்படையில் ஜுன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு 13-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா அறிவித்துள்ளார். தேர்வு தேதியை மாற்ற மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்த நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story