தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்


தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 May 2019 12:23 AM IST (Updated: 17 May 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர்,

கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மீது நடந்த செருப்பு, முட்டை மற்றும் கல்வீச்சு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தொண்டர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே!” என்று தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story