மாநில செய்திகள்

டெல்லியில் 23-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைமு.க.ஸ்டாலினுக்கு, சோனியாகாந்தி அழைப்பு + "||" + In Delhi Opposition leaders are on the 23rd Consulting

டெல்லியில் 23-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைமு.க.ஸ்டாலினுக்கு, சோனியாகாந்தி அழைப்பு

டெல்லியில் 23-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைமு.க.ஸ்டாலினுக்கு, சோனியாகாந்தி அழைப்பு
தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலைப்பாடு குறித்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் 23-ந்தேதி நடக்கிறது.
சென்னை,

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்துவருகிறது. இறுதிக்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் பிரதானமாக பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்டாலும், பல மாநில கட்சிகளும் மாற்று சிந்தனையுடன் களத்தில் உள்ளன. 23-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

எனவே தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக வருகிற 23-ந்தேதி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது.

மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

இந்த கூட்டத்துக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். இதுதொடர் பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நீங்கள் நிச்சயம் பங்கேற்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக முதன்முதலில் முன்மொழிந்தவர் மு.க.ஸ்டாலின். எனவே டெல்லி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நிச்சயம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளிலேயே இந்த கூட்டம் நடத்தப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை