நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் கமல்ஹாசனின் பேச்சு குறித்து பேச விரும்பவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் கமல்ஹாசனின் பேச்சு குறித்து பேச விரும்பவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 17 May 2019 11:28 AM IST (Updated: 17 May 2019 12:41 PM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் கமல்ஹாசனின் பேச்சு குறித்து பேச விரும்பவில்லை என்று மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மதுரை,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கமல்ஹாசனின் பேச்சு குறித்து எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் நல்லது என மதுரை ஐகோர்ட் கிளை கூறி உள்ளது. அதனால் நான் கருத்து கூற இயலாது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முன்பே  இது குறித்து ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில்  அரசின் தலையீடு இருப்பதாக துணைவேந்தர் கூறுவது தவறு. 

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story