அரசிடம் இருந்து தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் எதுவும் இல்லை -துணை வேந்தர் சூரப்பா


அரசிடம் இருந்து தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் எதுவும் இல்லை -துணை வேந்தர் சூரப்பா
x
தினத்தந்தி 17 May 2019 8:57 AM GMT (Updated: 17 May 2019 8:57 AM GMT)

அரசிடம் இருந்து தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் எதுவும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

சென்னை,

கிண்டி பொறியியல் கல்லூரி துவங்கிய 225ஆம் ஆண்டு விழா, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறியதாவது:

முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்களுக்கு சமூக ரீதியாகவும் மற்ற சில இடங்களில் இருந்தும் அழுத்தம் வருவது இயல்பு.  தமக்கு தேவையான எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கிறது . தனிப்பட்ட ரீதியில் அரசிடம் இருந்து அழுத்தம் எதுவும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அரசு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி சரியாக கூறியிருக்கிறார்.

சமூகத்தில் எதிர்மறை கருத்துகளை உருவாக்கும் என்பதாலேயே, 92 கல்லூரிகளில் 300 பாடப்பிரிவுகள் மூடப்பட்ட விவகாரத்தில் கல்லூரிகளின் பெயர்களை வெளியிடவில்லை. ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்வாகாத விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என கூறினார்.

Next Story