மாநில செய்திகள்

கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று நாடகமாடிய இளம்பெண் கைது + "||" + Kill a husband and an adult child Arrested teenager arrested

கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று நாடகமாடிய இளம்பெண் கைது

கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று நாடகமாடிய இளம்பெண் கைது
கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று நாடகமாடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜாவுக்கு, தீபிகா என்ற மனைவியும், ஒரு வயது குழந்தையும் உள்ளனர். ராஜா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு பெண்ணை காதல் திருமணம் செய்து அதே பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தனது கணவர் மற்றும் குழந்தையை கடந்த 13ம் தேதி முதல் காணவில்லை என்று ஆற்காடு காவல்நிலையத்தில் தீபிகா புகார் அளித்தார். கணவர் செல்போனை வீட்டிலேயே வைத்து சென்றதால், தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார். 

தீபிகாவின் பேச்சில் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கணவர் மற்றும் குழந்தையை கொன்று ஏரிக்கரையில் கொன்று புதைத்தது தெரியவந்தது. வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரிக்கரையில் சடலத்தை தோண்டி எடுக்கும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை