சென்னை பட்டினப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து: 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்


சென்னை பட்டினப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து: 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 18 May 2019 8:37 AM IST (Updated: 18 May 2019 8:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது.

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கம் டுமீல் குப்பத்தில் உள்ள  குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்,சில வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறின. 

இதனால் தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. இதில் 60-க்கும் மேற்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்துக்கு காரணம் மின்கசிவு என கூறப்படுகிறது.  தீ விபத்தால் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

Next Story