முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டம் வைகோ தலைமையில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டம் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
சென்னை,
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரில் மே 17, 18 தேதிகளில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். இதன் 10-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
ம.தி.மு.க. சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தலைமையில் கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நிர்வாகிகள் குமார், தென்றல் நிசார், பூங்காநகர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உயிரிழந்த ஈழத்தமிழர்கள் படங்களுக்கு பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், இலங்கையில் தமிழ் ஈழம் அமைய சுதந்திரமான பொதுவாக்கு எடுப்பு நடத்தப்பட வேண்டும். பன்னாட்டு சர்வதேச கூண்டில் இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும். தமிழர்கள் இடங்களில் உள்ள சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story