தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு


தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு
x
தினத்தந்தி 19 May 2019 11:39 PM GMT (Updated: 2019-05-20T05:09:21+05:30)

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தலுக்கு பின் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பில், தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரியவந்து உள்ளது.

சென்னை,

தேர்தலுக்கு பிறகு தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இரவு 9.30 மணிக்கு மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வரும் புதன்கிழமை வரை ஒளிபரப்பாக உள்ளது.

நேற்றைய மக்கள் யார் பக்கம்? நிகழ்ச்சியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கு பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் 11 ஆயிரத்து 700 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தலுக்கு பின் தந்தி டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வருமாறு:-

தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்:

மத்திய சென்னை

வட சென்னை

ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சீபுரம்

கடலூர்

கள்ளக்குறிச்சி

பெரம்பலூர்

திருச்சி

தஞ்சாவூர்

நாகப்பட்டினம்

மயிலாடுதுறை

கரூர்

ஈரோடு

சிவகங்கை

விருதுநகர்

தென்காசி

திண்டுக்கல்

தூத்துக்குடி

நீலகிரி

அ.தி.மு.க.

அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்:

திருவள்ளூர்

கிருஷ்ணகிரி

சேலம்

பொள்ளாச்சி

தேனி

திருப்பூர்

இழுபறி

இழுபறியில் உள்ள தொகுதிகள்:

கன்னியாகுமரி

அரக்கோணம்

விழுப்புரம்

ஆரணி

சிதம்பரம்

கோவை

ராமநாதபுரம்

தர்மபுரி

மதுரை

நாமக்கல்

திருவண்ணாமலை

தென் சென்னை

திருநெல்வேலி

புதுச்சேரி

தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்றுடன் நடந்து முடிந்து உள்ளது. இதன் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? தி.மு.க. திருப்பத்தை ஏற்படுத்துமா? அ.ம.மு.க. அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் இன்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு தந்தி டி.வி.யில் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலையும் தாண்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது 22 தொகுதிகளின் இடைத்தேர்தல். கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முடிவடைந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்துமுடிந்த 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் என மொத்தம் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதியான தட்டாஞ்சாவடியின் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ளது.

இன்று இரவு 9.30 மணிக்கு சாத்தூர், பெரம்பூர், தஞ்சாவூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, விளாத்திகுளம், மானாமதுரை, பெரியகுளம், பூந்தமல்லி, தட்டாஞ்சாவடி ஆகிய 12 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.

நாளை இரவு 9.30 மணிக்கு தொடரும் மக்கள் யார் பக்கம்? நிகழ்ச்சியில் மீதமிருக்கும் தொகுதிகளின் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்த 23 தொகுதிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 900 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. அரசு தப்புமா? தி.மு.க. இடைத்தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்துமா? இந்த இரண்டு கட்சிகளையும் தாண்டி அ.ம.மு.க. அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகிறதா? என்ற கேள்விகள் எழுந்து உள்ளன.

கூடவே தனியாக களம் காணும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் பதில் சொல்லும் வகையில் இன்றும், நாளையும் ஒளிபரப்பாகவுள்ள மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சி அமைய உள்ளது.

Next Story