மாநில செய்திகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடைஇந்த கல்வி ஆண்டு அறிமுகம் + "||" + From 1 to 8th grade For government school students New uniform

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடைஇந்த கல்வி ஆண்டு அறிமுகம்

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடைஇந்த கல்வி ஆண்டு அறிமுகம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது.
சென்னை,

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. கணினி வகுப்புகள், ‘ஸ்மார்ட்’ வகுப்புகள், ‘கியூ-ஆர்’ குறியீடு புத்தகங்கள் என்று அரசு பள்ளிகளில் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.


சீருடையிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதற்கட்டமாக 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனி சீருடையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனி சீருடையும் கடந்த கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும் இந்த கல்வி ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.

புதிய சீருடையாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பச்சை நிற அரைக்கை சட்டையும், பச்சை நிற அரைக்கால் டவுசரும், மாணவிகளுக்கு அரைக்கை சட்டையும், குட்டை பாவாடையும் (ஸ்கர்ட்) அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பழுப்பு நிற சட்டையும், பழுப்பு நிற பேன்ட்டும், மாணவிகளுக்கும் அதே நிறத்தில் ஓவர் கோட்டுடன், சுடிதார் டைப்பில் சீருடையாக வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திர பிரதேச அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம்
ஆந்திர பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேரை அரசு பள்ளியில் சேர்க்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புகலிடம் தேடி வந்துள்ள 3 பேருக்கு அரசு பள்ளியில் சேர இடமளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல்
பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
4. முதுகுளத்தூர் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பெற்றோர் போராட்டம்
முதுகுளத்தூர் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பெற்றோர் போராட்டம் நடத்தினர்.