கல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி தருவதில்லை -வெங்கையா நாயுடு பேச்சு


கல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி தருவதில்லை -வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 21 May 2019 5:55 AM GMT (Updated: 21 May 2019 5:55 AM GMT)

நடைமுறையில் உள்ள கல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், அவர்களின் தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி தருவதில்லை என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக தனி விமானத்தில்  விஜயவாடாவில் இருந்து நேற்று  சென்னை வந்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டார். அப்போது  விழாவில் பேசிய வெங்கையா நாயுடு,

விவசாயமே நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளது.  நடைமுறையில் உள்ள கல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், அவர்களின் தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லித் தருவதில்லை. 

ஆறுகள், குளங்கள் அழிக்கப்பட்டதே சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட காரணம். சாதி, மதம் கடந்து ஒற்றுமையாக இருப்பதே தேச பக்தி.  சக மனிதர்கள் மீது அன்பு, அக்கறை செலுத்துவதும் தேச பக்தியே. 

இவ்வாறு அவர் பேசினார்.

நாளை (புதன்கிழமை) கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் வெங்கையாநாயுடு  கலந்துகொள்கிறார். இதையடுத்து தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

துணை ஜனாதிபதி பங்கேற்கும் விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Next Story