மாநில செய்திகள்

சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா பெரும் பின்னடைவு + "||" + Karti Chidambaram beats BJPs H Raja in Sivaganga

சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா பெரும் பின்னடைவு

சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா பெரும் பின்னடைவு
சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக எச்.ராஜா களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். அங்கு பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளரைவிடவும் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எச்.ராஜா பின்தங்கியுள்ளார். 

கார்த்தி சிதம்பரம் 2,80,945 வாக்குகளைப் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். எச்.ராஜா 1,18,112 வாக்குகளைப் பெற்றுள்ளார். தொடரந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் பா.ஜனதா வெற்றியை நிலைநாட்டினாலும் பா.ஜனதா வேட்பாளர்கள் தமிழகத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிமராமத்து பணிகளில் சிவகங்கை மாவட்டம் முதல் இடம் - அமைச்சர் பாஸ்கரன் தகவல்
குடிமராமத்து பணிகளில் தமிழகத்திலேயே சிவ கங்கை மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
2. தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது - பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேச்சு
தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.
3. மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க தடை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
4. சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை
சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதியென சவுகிதார் எச். ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.