மாநில செய்திகள்

பா.ஜ.க. வெற்றி திகைப்புக்குரியது; தி.மு.க. வெற்றி வியப்புக்குரியது : கவிஞர் வைரமுத்து கருத்து + "||" + BJP Success is surprising; DMK The winner is surprising: the poet Vairamuthu commented

பா.ஜ.க. வெற்றி திகைப்புக்குரியது; தி.மு.க. வெற்றி வியப்புக்குரியது : கவிஞர் வைரமுத்து கருத்து

பா.ஜ.க. வெற்றி திகைப்புக்குரியது; தி.மு.க. வெற்றி வியப்புக்குரியது : கவிஞர் வைரமுத்து கருத்து
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கவிஞர் வைரமுத்து நேற்று சந்தித்தார்.
சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் பா.ஜ.க. திகைப்புக்குரிய வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி வியப்புக் குரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா முழுவதும் ஒரு சுனாமி அலை பாய்ந்து இருக்கிறது. இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்கள் எல்லாம் அந்த சுனாமி அலையில் நனைந்திருந்திருக்கிறது. அதில் நனையாமல் இருந்த சில மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது திராவிட இயக்கத்துக்கும், பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற கொள்கைவாதிகளுக்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்.

இந்த வெற்றி திராவிட இயக்க கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடலாம். ஆனால் வாக்குகள் வித்தியாசம் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்தது என்று நிச்சயமாக நான் கருதுகிறேன். திராவிட இயக்கங்கள் முன்னிலும் வலிமையாக, எழுச்சியாக, கொள்கை பேசும் கூட்டமாக திகழ வேண்டிய காலத்தில் இப்போது இருக்கிறோம். இந்த வெற்றியை தமிழர்கள் கொண்டாட வேண்டும். தமிழர்கள் தங்களை காத்துக்கொண்ட பாதுகாப்பு கவசமாக இந்த வெற்றியை நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.