மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு எப்போது? + "||" + When will the victors win the BY election by becoming the MLA?

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு எப்போது?

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு எப்போது?
தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 13 தொகுதிகளில் தி.மு.க.வும், 9 தொகுதிகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.
சென்னை,

வெற்றி பெற்ற 22 வேட்பாளர்களும் எம்.எல்.ஏ.வாக எப்போது பதவி ஏற்பார்கள் என்று கேட்டபோது, சட்டசபை செயலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள் அனைத்தும் தமிழக அரசிதழில் விரைவில் வெளியாகும். அவர்கள் பதவி ஏற்பதற்கான நாளையும், நேரத்தையும் சபாநாயகர் முடிவு செய்வார். தங்களுக் கான நேரத்தில் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி உறுதி மொழி படித்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கலாம். இதற்கு குறிப்பிட்ட காலக்கெடு கிடையாது.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எச்.வசந்தகுமார் ஏற்கனவே நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர் எம்.பி.யாக நீடிக்க வேண்டுமானால், அரசியல் சாசனப் பிரிவின்படி 14 நாட்களுக்குள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், எம்.பி. பதவி காலியாகி விடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.