மாநில செய்திகள்

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் திமுக புதிய எம்.பிக்கள் மரியாதை + "||" + DMK MPs pays tribute ANNA memorial

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் திமுக புதிய எம்.பிக்கள் மரியாதை

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் திமுக புதிய எம்.பிக்கள் மரியாதை
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சென்னை,

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்களான கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, டி.ஆர் பாலு உள்ளிட்ட எம்.பிக்கள் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் உழைப்பாளர் சிலையில் இருந்து பேரணியாக வந்து அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார் -கராத்தே தியாகராஜன்
ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார் என கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.
2. செங்கல்பட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தி.மு.க. ஊராட்சி கழக செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார்.
3. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.