சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்


சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 27 May 2019 7:00 AM GMT (Updated: 27 May 2019 7:29 AM GMT)

சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை,

நிலத்தடி நீரை எடுக்க ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்  27-ந்தேதி (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

ஏற்கனவே, சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினையை மேலும் அதிகப்படுத்தி, மக்கள் கடும் அவதிப்படும் சூழ்நிலை உருவானது. 

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, அறிவித்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக  லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

Next Story