மாநில செய்திகள்

தனியார் தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு + "||" + Private water lorry strike temporarily adjourned

தனியார் தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தனியார் தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தனியார் தண்ணீர் லாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், நட்சத்திர உணவகங்கள், தனியார் குடியிருப்புகளுக்கு தனியார் தண்ணீர் லாரிகள் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றன.

இந்நிலையில், அண்மையில் மனு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.  இதை தொடர்ந்து, அனுமதியின்றி தண்ணீர் எடுத்த தனியார் தண்ணீர் லாரிகள் பறிமுதல், சீல் வைப்பு நடவடிக்கைகள் பாய்ந்தன.

இதனை கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.  இதனிடையே முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்ளிட்டோர் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்வதால் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் திரும்பியவுடன் சந்தித்துவிட்டு போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளனர். இதனால், போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு எதிர்ப்பு; மதுரை ஐகோர்ட்டில் விவாதம்
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை ஐகோர்ட்டில் விவாதம் நடந்தது.
2. தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றம் செய்ய தடை கோரி வழக்கு; மதுரை ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்களை இதர கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யும் உத்தரவுக்கு தடை கோரிய வழக்கில், உயர்கல்வித்துறை முதன்மை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 15 பேரும் மதுரை கோர்ட்டில் ஆஜர்; விசாரணை 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 15 பேரும் மதுரை கோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த வழக்கு 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5. அன்னதான கூடம் மூடப்பட்டதை கண்டித்து சதுரகிரி கோவிலுக்கு பூஜை பொருள் கொண்டு செல்லும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதியில் அன்னதான கூடங்கள் மூடப்பட்டதை கண்டித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.