தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி


தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
x
தினத்தந்தி 28 May 2019 9:12 AM GMT (Updated: 28 May 2019 9:12 AM GMT)

தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத்தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பது தான் தாம் கண்ட உண்மை.  பணப்பட்டுவாடாவை தடுப்பது ஒரு சவால் தான். சமுதாயத்தை ஒருவர் மட்டுமே திருத்தி விட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சினைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வுகாண வேண்டும். 

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது.

பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என கூறினார்.

Next Story