மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு + "||" + 13 DMK members sworn in as MLAs

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை,

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்தநிலையில், வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் இன்று(புதன்கிழமை) காலை  சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

 பதவியேற்பு நிகழ்வின் போது, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்பட மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர்.