குடிநீர் பிரச்சினை: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் குடிநீர் தட்டுப் பாட்டைசமாளிக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக கமிஷனர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 149 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 48 மில்லி மீட்டர் அளவு தான் மழை பெய்து இருக்கிறது.
கடந்த ஆண்டும் இதேபோல் மழை அளவு குறைந்திருந்தது. இதன் காரணமாக நீலத்தடி நீர்மட்டம் கீழே போய் விட்டது. 2017-ம் ஆண்டு கடுமையான வறட்சி வந்தது. அப்போது சென்னையில் 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. தற்போது 525 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. ஜூன் 15-ந்தேதி வரை சென்னையில் தொடர்ந்து இதேபோல் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். அதன் பின்னர் சென்னையில் மழை பெய்யவில்லை என்றாலும் கூட இதர குடிநீர் ஆதாரங்கள் மூலம் நவம்பர் வரை தொடர்ந்து 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.233.72 கோடி ஒதுக்கீட்டில் பணிகள் நடந்து வருகிறது. நெய்வேலியில் 9 புதிய ஆழ்துளை கிணறுகள் மூலம் 10 மில்லியன் லிட்டர் கூடுதலாக தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி சுரங்கம் பரவனாற்றில் இருந்து ரூ.6.67 கோடியில் 60 மில்லியன் லிட்டர் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பூண்டி, தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளை சுற்றி உள்ள இடங்களில் விவசாய கிணறுகள் மூலம் 95 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
நெம்மேலியில் புதிதாக 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை வடிவமைக்க கோர்ட்டில் இருந்த தடை நீக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை நிறுவி 20 ஆண்டுகள் பராமரிப்பதற்காக ரூ.1,689.35 கோடிக்கு கூட்டு ஒப்பந்த பணி ஆணை கடந்த 27-ந்தேதி வழங்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு வாரத்துக்குள் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
நெம்மேலியில் தற்போது இயங்கி வரும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 முதல் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தென்சென்னை பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ.11 கோடியில் சிக்காராயபுரம் கல்குவாரியில் இருந்து பிப்ரவரி முதல் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.19.17 கோடியில் எருமையூர் கல்குவாரியில் இருந்து 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரெட்டை ஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளில் இருந்து 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து குடிநீர் தேவைக்கு வழங்க ரூ.53 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரெட்டை ஏரியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
நெம்மேலியில் புதிதாக 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை வடிவமைக்க கோர்ட்டில் இருந்த தடை நீக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை நிறுவி 20 ஆண்டுகள் பராமரிப்பதற்காக ரூ.1,689.35 கோடிக்கு கூட்டு ஒப்பந்த பணி ஆணை கடந்த 27-ந்தேதி வழங்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு வாரத்துக்குள் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
நெம்மேலியில் தற்போது இயங்கி வரும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 முதல் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தென்சென்னை பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story