இந்தி மொழி: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:-
புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டால், 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.
கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில், தேசிய கல்வி கொள்கையை உருவாக்கியுள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக் கூடாது.
அமமுக தலைவர் டிடிவி தினகரன்:-
தேர்தல் தோல்வியால் நாங்கள் அழிந்து போகப்போவதில்லை; அதிமுகவும் திமுகவும் கூட தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது வரலாறு
தமிழக மக்கள் எந்த வகையிலும் இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள். மத்திய அரசு முடிவை ரத்து செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு:-
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது; இது வன்மையாக கண்டிக்கக் கூடியது. தாய்மொழி தான் அவசியம், அதை சீர்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
மத்திய அரசு இந்தி திணிப்பில் ஈடுபட்டால் மீண்டும் போராட்டங்கள் நடைபெறும். 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
Related Tags :
Next Story