இருமொழிக்கொள்கைதான் அதிமுகவின் முடிவு -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
இரு மொழிக்கொள்கைதான் அதிமுக அரசின் உறுதியான கொள்கை முடிவு என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
கஸ்தூரி ரங்கன் குழு தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் ஒப்படைத்தது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக மும்மொழி கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு இருமொழி கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும். இரு மொழிக்கொள்கை தான் அதிமுக அரசின் உறுதியான கொள்கை முடிவு என்றார்.
Related Tags :
Next Story