இணை மந்திரி பதவி: ‘தேவையற்ற கருத்துகளை பதிவிடவேண்டாம்’ ரவீந்திரநாத்குமார் எம்.பி. வேண்டுகோள்


இணை மந்திரி பதவி: ‘தேவையற்ற கருத்துகளை பதிவிடவேண்டாம்’ ரவீந்திரநாத்குமார் எம்.பி. வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Jun 2019 3:58 AM IST (Updated: 2 Jun 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி கண்டது. அங்கு போட்டியிட்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றார்.

சென்னை,

இதையடுத்து அவருக்கு மத்திய அரசு இணை மந்திரி பதவி தரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்பதவியை, அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் வைத்திலிங்கமும் எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து ‘அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் தொடங்கிவிட்டது’, என்று கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்தநிலையில் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா நமக்கு கற்றுக்கொடுத்த பாடம், மக்கள் பணி செய்வதே. அவ்வழியே என் பயணம். எனது வெற்றிக்கு அயராது உழைத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. எனக்கு வாக்களித்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே என் தலையாய கடமை. தலைமை எடுக்கும் முடிவு தான் இறுதியானது. ஆகவே தேவையற்ற கருத்துகளை பதிவிடுவதை விடுத்து, நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள நிறை-குறைகளை எனக்கு தெரியப்படுத்துங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story