‘பா.ஜ.க. அரசால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது’ திருமாவளவன் பேட்டி
திருவொற்றியூர் சாத்துமா நகரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவொற்றியூர்,
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக மக்கள் 8 வழிச்சாலையை எதிர்த்தனர். ஐகோர்ட்டு இந்த திட்டத்திற்கு தடை விதித்து உள்ளது. ஆனால் மத்திய அரசு மேல்முறையிடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணி கட்சி தலைவர்களோடு ஆலோசித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
குற்ற வழக்குகளில் தொடர்புடைய பா.ஜ.க.வை சேர்ந்த பலர், தேர்தலில் போட்டியிட்டு மத்திய மந்திரிகளாகி விட்டனர் இதில் இருந்து பா.ஜ.க. ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கும்? என்பதை பாருங்கள். பா.ஜ.க அரசால் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியாது, மேலும், சமூகத்தில் பாதுகாப்பும் இருக்காது’ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story