தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியதா? அ.தி.மு.க., பா.ஜ.க. வாக்குகளை ஒப்பிட்டு ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து


தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியதா? அ.தி.மு.க., பா.ஜ.க. வாக்குகளை ஒப்பிட்டு ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து
x
தினத்தந்தி 2 Jun 2019 4:44 AM IST (Updated: 2 Jun 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதே சமயத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

சென்னை,

அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். பா.ஜ.க.வுக்கு தமிழக மக்களிடம் உள்ள எதிர்ப்பு அலை தான் அ.தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.

இதுதொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. 2 தொகுதிகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளிலும், 5 தொகுதிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளிலும், மற்றொரு 5 தொகுதிகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. பா.ஜ.க. 2 தொகுதிகளில் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளில் தான் வெற்றியை இழந்திருக்கிறது. இதேபோல 1 தொகுதியில் 3 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளிலும், இன்னொரு தொகுதியில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது. மோடிக்கு எதிரான அலை என்றால் பா.ஜ.க. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் 4 முதல் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கும். அப்படியென்றால் யாருக்கு எதிரான அலை இது? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

Next Story