மாநில செய்திகள்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Today is the chance of rain in Tamil Nadu Weather Research Center Information

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை போன்ற உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.


சென்னையில் சில பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு உண்டு.

தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்து உள்ளது. நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். பகல் நேரங்களில் உள் மாவட்டங்களில் வெப்ப தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை நேரங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தலா 3 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, திருச்சி மாவட்டம் தென்புறநாடு மற்றும் தர்மபுரியில் தலா 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்த இரு தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - விக்கிரவாண்டி 84 சதவீதம், நாங்குநேரி 66 சதவீதம்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்தது. நாங்குநேரியில் 66.35 சதவீத வாக்குகளும், விக்கிரவாண்டியில் 84.36 சதவீத வாக்குகளும் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.
3. அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் மழை தீவிரம் அடைகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 14 செ.மீ. மழை பெய்து உள்ளது.
4. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எத்தனை பேர் பலி? ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சலினால் எத்தனை பேர் பலியாகியுள்ளனர்? என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
5. ‘தமிழ்’ புகழ் பாடும் பிரதமர் “தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற செய்யும் முயற்சியாக இருக்கலாம்” கமல்ஹாசன் சொல்கிறார்
‘பிரதமர் நரேந்திர மோடி ‘தமிழ்’ புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார், இது தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க.வின் முயற்சியாக இருக்கலாம்’, என்று கமல்ஹாசன் கூறினார்.