தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம் : இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து என்றால் திமுக போராட தயங்காது


தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம் : இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து என்றால் திமுக போராட தயங்காது
x
தினத்தந்தி 3 Jun 2019 6:16 AM GMT (Updated: 3 Jun 2019 6:16 AM GMT)

தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம். இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து என்றால், ஜனநாயக வழியில் நின்று போராட திமுக தயங்காது என அக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில்   மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக கட்சி வளர்ச்சிப் பணிகள், தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் நன்றிக் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிகளில் அதற்கான காரணம் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ள சூழலில் அதற்கான பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

* தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து என்றால், எந்த நேரத்திலும் திமுக எதிர்க்கும்,  ஜனநாயக வழியில் நின்று போராட திமுக தயங்காது.
தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம்,  மத்திய அரசுக்கு திமுக வேண்டுகோள்.

* குடிநீர் பஞ்சத்தை போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை.    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் உள்பட  6 தீர்மானங்கள் தி.மு.க.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Next Story