மாநில செய்திகள்

தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது; உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் + "||" + In Tamilnadu, there is a possibility of throwing the heat- Chennai Weather Center

தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது; உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்

தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது;  உள் மாவட்டங்களில்  வெப்பநிலை அதிகமாக இருக்கும்
தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும், அதே சமயம் உள் மாவட்டங்களில் 2ல் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை

சென்னை வானிலை மையம் கூறியாதாவது:-

தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும், அதே சமயம் உள் மாவட்டங்களில் 2ல் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக கூடும் .

கரூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக பதிவாக கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, கோவை ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குமரிக் கடல் பகுதியிலும் மன்னார் வளைகுடா பகுதியிலும், மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில், 6 சென்டிமீட்டர் மழையும், அருப்புக்கோட்டையில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் -சென்னை வானிலை மையம்
15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் கூறி உள்ளது.
3. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. தமிழகத்திலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகம்-புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.