காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கர்நாடகம் உரிய முறையில் தண்ணீர் வழங்க வேண்டும்; கே.எஸ். அழகிரி


காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கர்நாடகம் உரிய முறையில் தண்ணீர் வழங்க வேண்டும்; கே.எஸ். அழகிரி
x
தினத்தந்தி 4 Jun 2019 4:10 PM GMT (Updated: 4 Jun 2019 4:10 PM GMT)

காவிரியில் தண்ணீர் இருப்பதால் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடகம் உரிய முறையில் தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. நீரை காவிரியில் இருந்து கர்நாடகம் திறந்து விடவேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.  இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.  தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாத தமிழக அரசு வரி பணத்தை என்ன செய்தது என்று முதல் அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

காவிரியில் தண்ணீர் இருப்பதால் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடகம் உரிய முறையில் தண்ணீர் வழங்க வேண்டும் என கூறினார்.

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும் என்றும் தேர்தலை நடத்தினால் தான் மக்களுடைய பிரச்னை தீரும் என்றும் அவர் கூறினார்.  பாரதியாருக்கு காவி தலைப்பாகை அணிந்திருப்பது போல படம் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது, தெரியாமல் நடந்திருந்தால் அதற்கு தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story