ரமலான் பண்டிகை: அதிகாலை சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு


ரமலான் பண்டிகை:  அதிகாலை சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Jun 2019 7:34 AM IST (Updated: 5 Jun 2019 7:34 AM IST)
t-max-icont-min-icon

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.  ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதிநாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

அவ்வகையில் நடப்பு ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை சிறப்பு தொழுகையில்  ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story