காயிதே மில்லத் 124வது பிறந்த நாள்; நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
காயிதே மில்லத் 124வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
இந்தியாவின் பெருமைமிகு முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத்தின் 124வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்த பள்ளிவாசலில் அவரது நினைவிடத்திற்கு சென்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று இந்நிகழ்வில் அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர் காயிதே மில்லத்.
மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து தி.மு.க. குரல் கொடுக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story