தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கக்கூடாது டாக்டர் ராமதாஸ், வைகோ வலியுறுத்தல்
தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் அணுக்கழிவு மையத்தை தமிழகத்தில் அமைக்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ், வைகோ வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணு மின்நிலை யத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருட்களை தற்காலிகமாக சேமித்துவைப்பதற் கான அணுக்கழிவு மையம் கூடங்குளம் அருகில் அமைக்கப்பட உள் ளது. இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் அடுத்த மாதம் 10-ந் தேதி ராதாபுரத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அணு உலைகள் அமைக் கப்படுவதால் அச்சத்தில் உறைந் திருக்கும் மக்களை கலவரப்படுத்தும் வகையிலான இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பது மிகவும் ஆபத்தாகும். எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாமல், எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் பெயரளவில் அணுக்கழிவு மையம் அமைப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஜப்பானில் ஏற்பட்டது போன்ற கதிர்வீச்சு உள்ளிட்ட ஆபத்துகள் தென் தமிழகத்திலும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.
எனவே அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் பகுதியில் அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என்பது தான். தற்காலிக மற்றும் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு பாதுகாப்பான இடம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறுதி செய்த பிறகு, அதற்கான பணிகளை அரசு தொடங்கினால் போதுமானது. இப்பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும் வரை கூடங்குளம் அணு உலைகளை தற்காலிகமாக மூட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் தற்காலிகமாக பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி, அதில் கூடங்குளம் அணுக்கழிவுகளை மட்டுமின்றி, இந்தியாவில் இயங்கி வரும் மற்ற 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டு வந்து சேமிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்தாகும். அணு உலைக்கழிவுகள் என்பது உறங்கிக்கொண்டிருக்கும் அணுகுண்டு போன்றது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அணுக்கழிவுகளை முழுமையாக செயலிழக்கச்செய்யும் தொழில்நுட்பம் இல்லாமல் திணறுகின்றன. ஏனெனில், புளுட்டோனியம் போன்ற அணு உலைக்கழிவுகளைச் செயலிழக்க செய்ய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
இந்நிலையில், கூடங்குளம் வளாகத்துக்குள்ளேயே அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே, அணுக்கழிவுகளை கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளத்தில் செயல்படும் அணுமின் உற்பத்தி நிலைகளை நிரந்தரமாக மூட வேண்டும், புதிய அணு உலைகளையும் நிறுவக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
டி.டி.வி.தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணு உலைகளே ஆபத்தானவை என்று அச்சப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதைவிட ஆபத்தான அணுக்கழிவுகளையும் அந்த வளாகத்திற்குள்ளேயே சேமித்து வைக்க நினைப்பது மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத ஈவு இரக்கமற்ற செயலாகும்.
அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு வெளியிடும் வரை, கூடங்குளத்தில் தற்போதுள்ள 2 உலைகளின் இயக்கத்தையும், புதிதாக 4 உலைகள் அமைப்பதற்கான முயற்சிகளையும் உடனடியாக நிறுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணு உலையால் அழிவின் பிடியில் வைக்கப்பட்டுள்ளனர் தமிழக மக்கள். கூடுதலாக, அணுக்கழிவையும் அங்கேயே வைப்பதென்றால், தமிழகம் அழிவின் விளிம்புக்கே தள்ளப்படும். எனவே அணுக்கழிவை அங்கே வைக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அம்முடிவை உடனடியாக கைவிடுமாறு வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story