தமிழக வளர்ச்சியை தடுப்பதில் மு.க.ஸ்டாலின் குறியாக இருக்கிறார் பா.ஜனதா அறிக்கை
மத்திய அரசு சார்பில் அண்மையில், வெளியான விளம்பரம் ஒன்றில், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், புலமை பெற்றிருப்பவர்கள் ஜனாதிபதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை,
தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு சார்பில் அண்மையில், வெளியான விளம்பரம் ஒன்றில், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், புலமை பெற்றிருப்பவர்கள் ஜனாதிபதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இதே சம்பவத்துக்காக கடந்த ஆண்டும் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போதே, அதற்கான விளக்கமும் மத்திய அரசால் அளிக்கப்பட்டது. ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்’ என்ற தன்னாட்சி அமைப்பு இருப்பதால், அந்த நிறுவனம் தொல்காப்பியர் விருது, குரல் பீடம் விருது, இளம் அறிஞருக்கான விருது போன்றவற்றை தொடர்ந்து 2005-2006-ல் இருந்து வழங்கி வருகிறது. இதர மொழிகளுக்கு இது போன்ற அதிகாரமிக்க அமைப்பு இல்லாத காரணத்தால் இந்த விளம்பரத்தில் அவை இடம் பெற்றிருந்தன என்பதை தெளிவாக சென்ற ஆண்டு விளக்கியும், மீண்டும் இந்த வருடமும் தேய்ந்து போன ஒலி பேழை போல் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அவரது அரசியல் அறிவையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. மேலும், தமிழ் மொழி வெறியை மக்களிடத்தில் ஏற்படுத்தி குழப்பத்தை விளைவித்து தமிழக வளர்ச்சியை தடுப்பதில் மு.க.ஸ்டாலின் குறியாக இருப்பதும் தெளிவாகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story