சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல் அமைச்சர் திறந்து வைத்தார்


சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல் அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:39 AM GMT (Updated: 7 Jun 2019 4:39 AM GMT)

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல் அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

சேலம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக பல் வலி காரணமாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வந்தார். தற்போது அவருக்கு பல் வலி முழுமையாக குணமாகி உள்ளது. அதைத்தொடர்ந்து, அவர் கட்சி மற்றும் அரசு சார்ந்த பணிகளை கவனிக்க தொடங்கியுள்ளார்.

அதன்படி, சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்களை இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பதற்காக நேற்று மாலை 5.10 மணிக்கு விமானம் மூலம் கோவைக்கு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சேலத்திற்கு அவர் சென்றார்.

இதன்பின்பு இன்று காலை 9.45 மணிக்கு சேலம் 5 ரோடு சந்திப்பில் ரூ.441 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியாக ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை திறந்துவைத்தார்.

Next Story