ஆசிரியர் தகுதி தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஆசிரியர் தகுதி தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் விரைவில் கொண்டு வரப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இனி ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடும் அளவுக்கு தேர்வு முறைகள் மாற்றியமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
Related Tags :
Next Story