சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்


சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் -  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
x
தினத்தந்தி 8 Jun 2019 7:37 PM IST (Updated: 8 Jun 2019 7:37 PM IST)
t-max-icont-min-icon

சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

புதுகோட்டை,

புதுகோட்டையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எப்போதும் அதிமுகவில் இடம் கிடையாது. 
இரட்டை தலைமையில் அதிமுக ஆளுமையுடன் உள்ளது.  ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த, இடைத்தேர்தலில் வென்ற 9 எம்எல்ஏக்களை தடுத்ததாக கூறுவது பொய்யானது.

மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு அதிமுக என்றும் ஒத்துழைக்காது. ராஜன்செல்லப்பாவின் கருத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அதிமுக தற்போது இரட்டை தலைமையில், ஆளுமையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story