மாநில செய்திகள்

காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு உள்பட தமிழக அதிகாரிகள் 4 பேர் சி.பி.ஐ.க்கு மாற்றம் + "||" + Four persons, including Kanchipuram Police Superintendent, were transferred to CBI

காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு உள்பட தமிழக அதிகாரிகள் 4 பேர் சி.பி.ஐ.க்கு மாற்றம்

காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு உள்பட தமிழக அதிகாரிகள் 4 பேர் சி.பி.ஐ.க்கு மாற்றம்
காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு உள்பட தமிழக அதிகாரிகள் 4 பேர் சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, 

மத்திய உள்துறை செயலாளர் எஸ்.பி.ஆர்.திரிபாதி பிறப்பித்துள்ள உத்தரவில், காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, தூத்துக்குடி சூப்பிரண்டு முரளி ரம்பா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சூப்பிரண்டு சோனல் சந்த்ரா, தமிழக ஐ.ஆர்.எஸ். அதிகாரி வித்யூத் விகாஷ் ஆகிய 4 பேர் சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா 2011-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். நீலகிரி மாவட்ட சூப்பிரண்டாக இருந்த இவர் ஸ்டெர்லைட் கலவரத்துக்கு பின்னர் தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். காஞ்சீபுரம் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியும் 2011-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சூப்பிரண்டு சோனல் சந்த்ரா 2008-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி. ஐ.ஆர்.எஸ். அதிகாரியான வித்யூத் விகாசும் 2008-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர்.

உத்தரவு நகல் கிடைத்த உடன், அவர்கள் மத்திய அயல் பணிக்கு திரும்புவார்கள். அடுத்த 4 ஆண்டுகள் அவர்கள் அந்த பணியில் ஈடுபடுவார்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 4 பேரும் தங்களை மத்திய அயல் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சங்க தேர்தலுக்கு போட்டியாக நடத்த இருந்த நடிகர் எஸ்.வி. சேகரின் நாடகம் இடமாற்றம்
நடிகர் சங்க தேர்தலுக்கு போட்டியாக நடத்த இருந்த நடிகர் எஸ்.வி. சேகரின் நாடகம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
2. கோர்ட்டில் வழக்கு தொடரக் கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் 115 வி.ஏ.ஓ.வினர் இடமாற்றம் : தமிழக அரசு ஆணை
கோர்ட்டில் வழக்கு தொடரக்கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் 115 கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
3. கோவை சரகத்தில் 98 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் அடங்கிய கோவை சரகத்தில் 98 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.