மாநில செய்திகள்

ரூ.27½ கோடி வங்கி கடன் மோசடி: 57 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு + "||" + Rs 27 ½ crore bank loan fraud: Case registered against 57 people

ரூ.27½ கோடி வங்கி கடன் மோசடி: 57 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

ரூ.27½ கோடி வங்கி கடன் மோசடி: 57 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
ரூ.27½ கோடி வங்கி கடன் மோசடியில் 57 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளது.
சென்னை, 

இந்தியன் வங்கி மண்டல அலுவலகங்கள் சார்பில் சி.பி.ஐ.க்கு அளிக்கப்பட்ட புகார் மனுவில், ‘தவறான வாடகை ஒப்பந்தம், குடியிருக்கும் முகவரி, வருமான வரி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தாக்கல் செய்து வாடிக்கையாளர்கள் சிலர் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். வங்கி மேலாளர்களும் விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் கடன் கொடுத்துள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வங்கி கடன் வழங்குவதில் ரூ.27.6 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இதற்கு மூளையாக செயல்பட்ட முகப்பேரை சேர்ந்த சரவணன் உள்பட 57 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதில் இந்தியன் வங்கி போரூர் கிளையின் முன்னாள் தலைமை மேலாளர் ஒருவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.