அரசு நிலம் அபகரிப்பு புகார்: தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனை கைது செய்ய தடை - ஐகோர்ட்டு உத்தரவு


அரசு நிலம் அபகரிப்பு புகார்: தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனை கைது செய்ய தடை - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:22 PM GMT (Updated: 12 Jun 2019 11:22 PM GMT)

அரசு நிலம் அபகரிப்பு புகாரில் தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனை கைது செய்ய தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, 

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த எஸ்.பார்த்திபன். இவர், கிண்டி போலீசில் கொடுத்த புகாரில், ‘தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் சென்னை மேயருமான மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் சிட்கோ நிறுவனம், எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு கடந்த 1959-ம் ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கிய அரசு நிலத்தை சுப்பிரமணியன் மேயராக இருந்த 2006-2011 காலக்கட்டத்தில் கூட்டு சேர்ந்து அபகரித்துள்ளனர். எனவே இருவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இதன்படி, அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது இருவரையும் கைது செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘அதுவரை மா.சுப்பிரமணியன், காஞ்சனா ஆகியோரை கைது செய்ய போலீசுக்கு தடை விதித்து’ உத்தரவிட்டார்.

Next Story