மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு + "||" + Petrol and diesel prices decreased in Chennai

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.  சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறை கைவிடப்பட்டு தினந்தோறும் என்ற அடிப்படையில் பெட்ரோல், டீசல் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், கடந்த ஆண்டு இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.  இதில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது வாகன ஓட்டிகளுக்கு இடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  இதன்பின் பெட்ரோல் விலை குறைய தொடங்கியது.

சென்னையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.73.17க்கும், டீசல் விலை ரூ.68.11க்கும் விற்கப்பட்டு வந்தது.  கடந்த 2 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 9 காசுகள் குறைந்து ரூ.73.08க்கும், டீசல் விலை 6 காசுகள் குறைந்து ரூ.68.05க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல்,டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
2. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது.
3. பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து ரூ.72.70 ஆக விற்பனையாகிறது.
4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு
5. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக குறைவு
பெட்ரோல், டீசல் விலை 6-வது நாளாக குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது.