மாநில செய்திகள்

தமிழகத்தில் தமிழில் பேச தடையா? தெற்கு ரெயில்வேக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை + "||" + MK Stalin's warning to Southern Railway

தமிழகத்தில் தமிழில் பேச தடையா? தெற்கு ரெயில்வேக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழகத்தில் தமிழில் பேச தடையா?  தெற்கு ரெயில்வேக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
சென்னை, 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில்வே கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் நிலைய அலுவலர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது என்று தமிழகத்திலேயே தமிழில் பேசத் தடை விதித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஆணவமாகவும், அடாவடித்தனமாகவும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தமிழ் பேசக்கூடாது, இந்தி பேசு என்பது மொழித்திணிப்பு மட்டுமல்ல மொழி மேலாதிக்கம், மொழி அழிப்பு. மேலும் மேலும் தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாடி வருகிறார்கள், சீண்டிப் பார்க்கிறார்கள். இதுபோன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக உள்ளது- மு.க ஸ்டாலின்
விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
2. அரசு விழாக்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை? மு.க.ஸ்டாலின் கேள்வி
மாவட்டங்களில் நடக்கும் அரசு விழாக்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
3. தி.மு.க. மீது மீண்டும், மீண்டும் பழிபோடுவதை நிறுத்தவேண்டும் - மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறமுடியாமல் கோட்டை விட்ட வரலாற்று பிழை யை மறைக்க தி.மு.க. மீது மீண்டும், மீண்டும் பழி போடுவதை நிறுத்தவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிப்புகள் வெளியிடலாமா? மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
5. மத்திய பட்ஜெட்: ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு - மு.க.ஸ்டாலின்
மத்திய பட்ஜெட், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.