மாநில செய்திகள்

தமிழகத்தில் டாக்டர்கள் நாளை வேலைநிறுத்தம் : அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்படும் + "||" + Doctors strike in Tamil Nadu tomorrow The Emergency Care Unit only operates

தமிழகத்தில் டாக்டர்கள் நாளை வேலைநிறுத்தம் : அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்படும்

தமிழகத்தில் டாக்டர்கள் நாளை வேலைநிறுத்தம் :  அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்படும்
இந்திய மருத்துவ சங்கம் (தமிழ்நாடு) மாநிலத்தலைவர் சு.கனகசபாபதி, மாநில செயலாளர் பா.ஸ்ரீதர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, 

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பயிற்சி டாக்டர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளனர். இது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதை உணர்த்துகிறது.

இதை கண்டித்து 17-ந்தேதி (நாளை) காலை 6 மணி முதல் 18-ந்தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரம் தமிழகம் முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. மக்கள் நலன் கருதி அத்தியாவசிய மருத்துவ சேவைகள் (எமர்ஜென்சி) தொடரும். வெளி நோயாளிகள் பிரிவுகள் மட்டுமே இயங்காது. அனைத்து சிறப்பு மருத்துவ சங்கங்களும் எங்களுடன் இணைந்து போராடுவார்கள்.

அதேவேளை இந்திய அளவில் மருத்துவ அமைப்புகளுக்கான பாதுகாப்பு முறைமைகள் வகுக்கப்பட வேண்டும். மருத்துவ மையங்களையும், மருத்துவ ஊழியர்களையும் பாதுகாக்க தேசிய அளவில் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். போக்சோ சட்ட விதிமுறைகள் இந்த சட்டத்திலும் இணைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.