மாநில செய்திகள்

ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன் + "||" + hanks to the Chief Minister, Deputy Chief Minister by MafoiPandiarajan

ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்

ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்
ஆவடியை மாநகராட்சியாக அறிவித்ததற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,

அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சியுடன் மற்ற பகுதிகளை இணைத்தால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. ஆவடி நகராட்சி மட்டும் தான் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

5.2 லட்சம் மக்கள் தொகையுடன் 48 வார்டுகள் கொண்ட ஆவடி நகராட்சி மட்டுமே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.

இதற்காக முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஆவடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?
மாநகராட்சியாக ஆவடி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...