தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Jun 2019 4:33 PM GMT (Updated: 18 Jun 2019 4:33 PM GMT)

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கூட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அடுத்த இரு தினங்களுக்கு இயல்பைவிட 4 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை உள்பட 13 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.

சில இடங்களில் அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வாயு புயல் கரையை கடந்த பிறகு தான், தமிழகத்தில் மழை தீவிரம் அடைந்து வெப்ப நிலை குறையும் என கூறப்படுகிறது.

Next Story