காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
x
தினத்தந்தி 19 Jun 2019 7:59 AM GMT (Updated: 19 Jun 2019 7:59 AM GMT)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இன்று 49-வது பிறந்தநாள். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், ஏ.கே.அந்தோணி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இன்று காலை ராகுல் காந்தியின் இல்லத்துக்குச் சென்று நேரில் வாழ்த்துக்களை  தெரிவித்தனர்.

இந்த நிலையில் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினும் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,   "என்னுடைய சிறந்த நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல ஆண்டுகள் பொதுசேவையில் பணியாற்ற வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Next Story