பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைவு


பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைவு
x
தினத்தந்தி 20 Jun 2019 12:56 AM GMT (Updated: 20 Jun 2019 12:56 AM GMT)

பெட்ரோல் விலை தொடர்ந்து 5-வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றியமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. 

இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் ஐந்தாவது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.64 ஆக தொடர்கிறது. டீசல் விலை, ஐந்து நாட்களுக்கு பிறகு, 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.46 காசுகளாகவும் உள்ளது.

Next Story