மாநில செய்திகள்

48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம் + "||" + In 48 hours: In the North Bengal Sea The ventricular inferior region is formed Meteorological Center

48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்

48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது தென்மேற்குப் பருவக்காற்றை வலுப்பெறச் செய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.  இது தென்மேற்குப் பருவக்காற்றை வலுப்பெறச் செய்யும். இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 

காற்றில் இருந்த ஈரப்பதத்தை வாயு புயல் எடுத்துச் சென்றதால், தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தீவிரமாகாதா நிலையில், வங்க கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பருவக்காற்றை வலுப்பெற செய்யும்.

இதனால் இன்னும் சில தினங்களில் தமிழகத்திலும், கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு  மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
3. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
5. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.